வெறும் 13 ஆயிரம் கோடி ரூபாயை ஒழிப்பதற்காகவா பணமதிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது? என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், 15,310,73 கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் 10,720 கோடி ரூபாய் பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 99.3 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது என 2017-18ஆம் ஆண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ‘வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? 13 ஆயிரம் கோடி பணமும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம் அல்லது தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம்’ என பதிவிட்டுள்ளார்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்