
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 8 தங்கம் 11 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் 9வது இடத்தில் இந்திய உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018, அதாவது 18வது ஆசியப் போட்டி இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இதுவரை 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது. அத்துடன் 11 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் வென்றுள்ளது. மொத்தம் 41 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி 9வது இடத்தில் உள்ளது. 86 தங்கம், 62 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 191 பதக்கங்களை வென்றுள்ள சீனா முதலிடத்தில் உள்ளது. 43 தங்கம், 36 வெள்ளி, 57 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களுடன் ஜப்பான் 2வது இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து 28 தங்கம், 36 வெள்ளி, 42 வெண்கலம் என 3வது இடத்தில் என கொரியாவும், 22 தங்கம், 15 வெள்ளி, 27 வெண்கலம் பெற்று இந்தோனேஷியா 4வது இடத்திலும் உள்ளது. 17 தங்கம், 15 வெள்ளி, 15 வெண்கலத்துடன் ஈரான் 5வது இடத்தில் உள்ளது.