Published : 28,Mar 2017 08:19 AM

மோடிக்கு வாழ்த்துச் சொன்ன டிரம்ப்

American-President-Donald-Trump-congratulates-Narendra-Modi

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்ப்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்தார்.

தேர்தல் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோரை டொனால்டு டிரம்ப் தொடர்பு கொண்டார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தெரிவித்தார்.

சமீபத்தில் முடிவுகள் வெளியான ஐந்து மாநில தேர்தல்களில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்தது. அதுபோல, ஜெர்மனியில் அதிபர் அங்கேலா மேர்க்கெலினின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி சார்லாந்த் மாநிலத்தில் நடந்த தேர்தலில் வென்றது. இதனைத் தொடர்ந்து மோடி மற்றும் அங்கேலாவைத் தொடர்பு கொண்ட ட்ரம்ப் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தெற்காசியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல் பற்றி மோடியும் டிரம்ப்பும் விரிவாக, விவாதித்தாகக் கூறப்படுகிறது. இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக ஜூலை மாதம் ஜெர்மனியில் நடைபெறும் ஜி -20 மாநாட்டில் சந்திப்பார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் இதுவரை மூன்று முறை உரையாடியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்