திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்குப் பிறகு, கடந்த 14ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தச் செயற்குழுக் கூட்டத்திலே திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் கசிந்தன.
ஆனால் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கே உள்ளது. இதனால் விரைவில் பொதுக்குழுக் கூட்டம் கூடும் என சொல்லப்பட்டது. அதனையடுத்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுயிருந்த அறிக்கையில், திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுயிருந்தது. அதில் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தின் போது, தணிக்கைக்குழு அறிக்கை, தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுயிருந்தது.
இந்தநிலையில் இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செய்தார். அதன்பின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின் கருணாநிதி படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செய்து, தாயார் தயாளு அம்மாளிடம் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கொடுத்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?