'பாதுகாப்புத்துறைக்கு பெண்கள் அதிகம் வர வேண்டும்' : நிர்மலா சீதாராமன்

'பாதுகாப்புத்துறைக்கு பெண்கள் அதிகம் வர வேண்டும்' : நிர்மலா சீதாராமன்
'பாதுகாப்புத்துறைக்கு பெண்கள் அதிகம் வர வேண்டும்' : நிர்மலா சீதாராமன்

பாதுகாப்புத்துறையில் பணியாற்ற பெண்கள் அதிக அளவில் முன் வர வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியி‌ல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 


நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறையில் பணியாற்ற அதிக அளவில் பெண்கள் முன்வர வேண்டும் என்றும், குறிப்பாக தமிழக பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஐஏஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், தமிழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com