புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அந்தப் பெண் காவலரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை நடப்பதாக கூறி ஆசிரமத்தை சேர்ந்த ஹேமலதா என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவரது தாய் மற்றும் சகோதரிகள் நீரில் மூழ்கி இறந்தனர். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார் ஹேமலதா. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆளுநர் மாளிகை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு காவலரின் கையை கடித்துவிட்டு ஒட முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஹேமலதாவை பெரியகடை காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!