Published : 28,Mar 2017 02:16 AM
விவசாயிகள் போராட வேண்டியது டெல்லியிலா? தமிழகத்திலா?: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

தமிழக விவசாயிகள் போராட வேண்டியது டெல்லியிலா தமிழகத்திலா என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் இனியேனும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார். விவசாய பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசால் விவரமான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக என்றும் அவர் வினவியுள்ளார். தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அதுகுறித்து எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.