ஏழ்மையுடன் கருவாடு விற்கும் மீனவர் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் கொளுத்தும் வெயிலில் கருவாடுடன் காயும் மீனவர் தான் கார்த்திகேயன். இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். பெரிய விசைப்படகுக்கு செல்வோர் பயன்படுத்தும் சிறிய படகை கொண்டு, குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டிவருகிறார். சிறு மீன்களை வாங்கி கருவாடாக்கி சில்லறை விற்பனைக்கு கொடுத்து வருகிறார். கேரள மக்கள், வெள்ள பாதிப்புகளால் பெருந்துயரத்தில் இருப்பதை அறிந்து, இவர் தனது உண்டியல் சேமிப்புத்தொகையான ரூ.2 ஆயிரத்தை நிதியாக புதிய தலைமுறை அறக்கட்டளை வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.
கஷ்டமான பொருளாதார சூழலில் இருந்தாலும், கார்கில் போர் சமயத்தில் ஆயிரம் ரூபாயை நிதியாக அளித்தவர்தான் இந்த மீனவர். வாடும் மனிதர்களை கண்டு மனம் வாடும் இவர் போன்ற மனிதர்களின் பேரன்பு, எத்தகைய துயரத்தையும் கடக்கும் மன வலிமையை தரும் என்றால் அது மிகையல்ல.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்