
ரஷ்யா மீண்டும் இணையவழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் குற்றச்சாட்டு.
அமெரிக்கா மீது ரஷ்யா மீண்டும் இணையவழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியிருக்கிறது. அதிபர் தேர்தலின்போது இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டது போல் வரவிருக்கும் தேர்தலின்போதும் தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முயற்சி செய்வதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது. போலியான இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்ய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.