Published : 28,Mar 2017 01:59 AM

டிடிவி தினகரன் பணப்பட்டுவாடா செய்கிறார்: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு

OPS-Team-alleged-TTV-Dhinakaran

ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் பணப்பட்டுவாடா செய்‌வதாகவும் அது குறித்து தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்க உள்ளதாகவும்‌ ஓ.பி.எஸ் அணியினர் கூறியுள்ளனர்.

அமைச்சர்கள் மூலம் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்துவருவதாக ஓ.பி.எஸ் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு டெல்லியில் தேர்தல் ஆணைய ஆணைய அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக ஓ.பி.எஸ் அணியில் உள்ள மைத்ரேயன் கூறியுள்ளார்.

இதனிடையே, புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய ஓ.பன்னீர்செல‌வம், ஆர்.கே.நகரில், தனது அணி வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்