செல்போனில் உள்ள அந்தரங்கத் தகவல்களைத் திருடி, அதை மூலம் தற்கொலைக்கு தூண்டும் மோமோ விளையாட்டு தென்மாவட்டங்களில் வாட்ஸ் ஆப் மூலம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் புளூவேல் என்ற விளையாட்டு மூலம் பலர் உயிரிழந்தனர், அப்போது அந்த விளையாட்டிற்கு தடை விதிகிக்கப்பட்டது, இந்த நிலையில் தற்போது மோமோ என்ற வாட்ச் அப் மெசேஜ் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பலரது வாட்ச் அப் எண்ணிற்கு மோமோ என்ற பெயரில் மெசேஜ்கள் வருகின்றன, அதில் அந்த நபரின் அனைத்து விவரங்களையும் சரியாக கூறி ஒரு விதமான மிரட்டலை ஏற்படுத்தும் வகையில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தை இந்த மெசேஜ் தற்போது மிரட்டி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பலரின் வாட்ஸ் அப் களுக்கு இந்த மெசேஜ் வந்த வண்ணம் உள்ளது.
இது யார் அனுப்புகிறார்கள், என்ன நோக்கத்திற்கு அனுப்பப்படுகிறது என்ற எந்த ஒரு விவரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவரின் மொபைல் எண்ணிற்கு மோமோ என்ற பெயரில் மெசேஜ் வந்தது.
முதலில் ஹாய் என மெசேஜை அனுப்பிய நிலையில் தொடர்ந்து அவரது பெயர் அவர் என்ன வேலை செய்கிறார், என்ன பொறுப்பில் இருக்கிறார், அவர் மொபைலில் அதிகமாக யாரிடம் பேசுகிறார் என்ற பல தகவல்களை கூறியது. தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதே லிங்க் ஒன்றை அனுப்பி அதனை ஓப்பன் செய்ய சொல்லியது. அதனை ஓப்பன் செய்ய மறுக்கும் பட்சத்தில் வேறு ஒரு எண்ணில் இருந்து மறுபடியும் மெசேஜ் மூலம் லிங்க் அனுப்புகிறது, தொடர்ந்து அதனை ஓப்பன் செய்தால் மரணத்தை தருவேன் என்று கூறுகிறது, அந்த லிங்கை நாம் ஓப்பன் செய்தால் நம் மொபைலில் உள்ள அனைத்து தனிப்பட்ட விசயங்களையும் எடுத்துக் கொண்டு அதனை கொண்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இதே போல் பெண் ஒருவரின் மொபைல்க்கு மோமோ என்ற பெயரில் மெசேஜ் வந்தவுடன் அந்த பெண் பயந்து மொபைலில் உள்ள அனைத்தையும் டெலிட் செய்து விட்டு மொபைலை பயன்படுத்தாமல் வைத்து விட்டதாக கூறுகின்றனர், இது போல் இளம் பெண்கள், இளைஞர்களை குறிவைத்து தற்போது மரணத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுக்கும் மோமோ மெசேஜ் தென் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது என்றும், மரணம் நிகழ்வதற்கு முன் அரசு இதனை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?