Published : 22,Aug 2018 05:13 AM

ஐக்கிய அரபின் ரூபாய் 700 கோடியை ஏற்க வாய்ப்பில்லை !

kerala-flood--The-central-government-may-can-not-accept-UAE-700-crores

கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைவிடாத மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கேரளா. இதனால் பல அண்டை மாநிலங்களும் பல்வேறு உதவிகளை கேரளாவிற்கு செய்து வருகிறது. இது தவிர நடிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் உதவிக்கரம் நீண்டு வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூபாய் 700 கோடி நிதியுதவி வழங்குவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். 

Read Also -> கேரளாவுக்கு ஐக்கிய அரபு ரூ.700 கோடி நிதி ! 

              

Read Also -> கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை -ஜே.பி.நட்டா

 இந்த நிலையில் தான் கேரளாவுக்கு வெளிநாட்டு அரசுகள் வழங்கும் நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என்றும், சொந்த முயற்சியாகவே நிவாரணப்பணி மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய முயற்சி எடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.மழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 30 லட்சம் இந்தியர்களில் 80 சதவிகிதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். மாலத்தீவு அரசு கேரளாவுக்கு 35 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்