ஆர்.கே.நகருக்கு மொபைல் செயலி... உலக தரத்தில் ஜிம்: அதிமுக அம்மாவின் தேர்தல் அறிக்கை

ஆர்.கே.நகருக்கு மொபைல் செயலி... உலக தரத்தில் ஜிம்: அதிமுக அம்மாவின் தேர்தல் அறிக்கை
ஆர்.கே.நகருக்கு மொபைல் செயலி... உலக தரத்தில் ஜிம்: அதிமுக அம்மாவின் தேர்தல் அறிக்கை

ஆர்.கே.நகருக்கு மொபைல் செயலி கொண்டு வரப்படும் என்றும் உலகத்தரத்திலான ஜிம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அதிமுக அம்மா அணியின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

அதிமுக அம்மா அணியின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “தொகுதியில் அனைத்து வசதிகளையும் உடைய உலகதரத்திலான ஜிம் அமைத்து தரப்படும்.

ஆர்.கே.நகர் மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க ‘விஷன் ஆர்.கே.நகர்’என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும். அனைத்து வசதிகளையும் கொண்ட பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

எண்ணுர்-மணலி சாலையில் ரூ117 கோடிக்கு மேம்பாலம் கட்டி தரப்படும்.

10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

மீன் வணிகர்களுக்கு கடைகள் கட்டித்தரப்படும். நவீன மீன் அங்காடி அமைக்கப்படும்

அரசு, தனியார் வங்கிகளின் புதிய கிளைகள் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

வேலைவாய்ப்புக்கு ஆலோசனை மையங்கள் மற்றும் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாசு இல்லாமல் நவீனமயமாக்கப்படும்.

வீடு இல்லாத 57,000 பேருக்கு வீடுகள் புதிய கட்டி தரப்படும்

வாரம் ஒரு முறை குறைத்தீர்ப்பு முகாம் நடத்தப்படும்.

வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடுங்கையூர் எழில் நகரில் அனைத்து சமூதாயத்தினரும் பயன்படுத்தும் மயானம் அமைக்கப்படும்” என்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com