Published : 27,Mar 2017 12:37 PM
தீவிரவாதிகளுக்கு உதவும் வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஆம்பெர் ரெட், வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் செயலிகள் மூலம் தீவிரவாதிகள் பாதுகாப்பாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர் என்றார். இதனால், வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகளில், தேவைப்படும் நேரத்தில் போலீஸார் விசாரணை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அருகில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படும். இதனால், அந்த தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.