[X] Close

தீபாவுக்கு படகுச் சின்னம் ஒதுக்கீடு

Boat-symbol-for-Deepa-in-RK-Nagar-By-election

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் ஜெ.தீபாவுக்கு படகு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

திராட்சைக் கொத்து, பேனா மற்றும் படகு ஆகிய சின்னங்களை ஒதுக்குமாறு தீபா தரப்பில் கோரியிருந்தனர். திராட்சை கொத்து 2 இலைகளுடன் இரட்டை இலை சின்னத்தை நினைவுபடுத்தும் விதத்தில் இருப்பதாக தீபா தரப்பில் கருதப்பட்டதாக தகவல் வெளியானது. அதேபோல ஜெயலலிதாவின் பேனாவை நினைவுபடுத்தும் விதமாக பேனா சின்னத்தை தீபா கோரியிருந்த நிலையில், தற்போது அவருக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் சின்னம் ஒதுக்கீட்டுக்குப் பிறகே பரப்புரை என்று தீபா தெரிவித்திருந்தார். ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close