நெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்

நெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்
நெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பீக் அவர் எனப்படும் காலை நேரத்தில் ரயில்வே நடைபாலத்தை கடக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. ‌இதனால் பெண்கள், வயதானவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

சென்னை புறநகர் ரயில் சேவையை நாள்தோறும் லட்சக்கண பேர் பயன்படுத்துகிறார்கள். தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான தடத்தில் மட்டும் நாள்தோறும் ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் பயணப்படுகிறார்கள். இந்த வழித்தடத்தில் அதிக அளவு பயணிகள் இறங்கிச் செல்லக்கூடிய ரயில் நிலையங்களில் கிண்டியும் ஒன்று. இங்கு பீக் அவர் எனப்படும் காலை எட்டரை மணி முதல் பத்து மணிவரையில் ரயில்வே நடைபாலத்தை கடக்க முடியாமல் பயணிகள் கூட்டநெரிசலில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. இன்று காலையும் அதிக அளவிலான கூட்டத்தால் பயணிகள் நடைமேம்பாலத்தை கடக்க முடியாமல் திணறினர்.

பணி நிமித்தமாகவும், மாணவ, மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளன நிலையில், கூட்டத்தை ஒழுங்குப்படுத்த காவலர்கள் யாரும் அங்கு இல்லாததும் நெரிசலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றபோது தொலைபேசி அழைப்பை ஏற்று பதில் கூறவில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com