Published : 20,Aug 2018 04:02 AM
வி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது

சென்னை அயனாவரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயனாவரத்தைச் சேர்ந்த ஜோசப் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாநில துணைச் செயலாளராக இருந்தார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜோசப் 15 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். நேற்று அயனாவரம் நியூ ஆவடி ஆவடி சாலை அருகே ஜோசப் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு ரவுடிகள் ஒழிப்புப்பிரிவு காவலர் சதீஷ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் அப்புனு ஆகியோர் இருந்துள்ளனர். இந்த நிலையில் இருசக்கர வாகத்தில் வந்த 4 பேர் ஜோசப்பை வெட்டிக் கொலை செய்தனர். நிகழ்விடத்தில் இருந்த காவலர் சதீஷுக்கும் வெட்டு விழுந்தது.
Read Also -> வெள்ளத்தில் தவித்த நாய்: உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் !
Read Also -> கேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் !
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ், அஜித் மற்றும் வேலு ஆகியோரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக லோகேஷ் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஜோசப்பை கொலை செய்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். காவலர் சதீஷ் எதற்காக ஜோசப்பை பார்க்கச் சென்றார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்துள்ள ஜோசப்பை கண்காணிக்கவே தான் அங்கு சென்றதாக காவலர் சதீஷ் தெரிவித்துள்ளார். இதே போல் அப்புனுவுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.