Published : 19,Aug 2018 11:06 AM

“தாய்க்குலத்தை முதுகில் சுமந்து மீட்ட மீனவர்” - குவியும் சல்யூட்கள்

Kerala-Floods--A-Fisherman-Who-is-Rescue-the-Stranded-Women

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை உள்ளூர் மீனவர்கள் மீட்டு வருகின்றனர். 

100 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிவிட்டுள்ள டுவிட்டரில் கேரள மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 23 ஆயிரத்து 213 பேர் மீட்கப்ப‌ட்டுள்ளதாகவும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Also -> மத்திய அரசு செய்த மீட்பு நடவடிக்கைகள் என்ன? - பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட்

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் மக்களை மீட்டு வருகின்றனர். அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஜெய்சல் (32) என்ற மீனவர் தனது படகுடன் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பெண்கள் படகில் ஏறுவதற்கு தனது முதுகை படியாக மாற்றிய காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

Read Also -> 

மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு 

 

Read Also -> ‘கேரளாவிற்கு நாடே துணை நிற்கும்’ - குடியரசுத்தலைவர் உறுதி

தனுர் பகுதியில் மீட்பு படகு ஒன்றில் சென்ற அவர், அங்கிருக்கும் பெண்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளார். அப்போது பெண்கள் படகில் ஏறுவதற்கு உதவியாக அவர் தனது முதுகை படிக்கட்டாக மாற்றியுள்ளார். அதில் ஏறி பெண்கள் பத்திரமாக படகிற்கு சென்றனர்.  இதுதொடர்பாக பேசிய அவர், “தேசிய பேரிடர் மீட்புப்படை முழுவீச்சில் செயல்படுவதாக தெரிவித்தார். வெள்ளத்தில் மீண்டு வரமுடியாத இடங்களில் சிக்கியவர்களை நாங்கள் மீட்கிறோம். நாங்கள் செல்லும் போது உயிர்காக்கும் உடை போன்ற எந்த தற்காப்பு சாதனங்களையும் கொண்டு செல்வதில்லை” என தெரிவித்தார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்