Published : 18,Aug 2018 11:27 AM

ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு

Kofi-Annan--the-former-UN-secretary-general--has-died-aged-80--Annan-won-the-Nobel-Peace-Prize-for-humanitarian-work

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளருமான கோபி அன்னான் இன்று காலமானார். அவருக்கு வயது 80. 

கோபி அன்னான் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பிறந்தார். 1962 ஆம் ஆண்டு, கோஃபி அன்னான், உலக சுகாதார அமைப்பில் ஒரு பட்ஜெட் அதிகாரியாக தனது பணியை துவங்கினார். 1974 முதல் 1976 வரை, அவர் கானா சுற்றுலாத்துறை இயக்குநராக பணியாற்றினார் .1980 களின் பிற்பகுதியில், அன்னான் ஐ.நா வேலைக்கு திரும்பினார் . உதவி பொதுச்செயலாளராக மூன்று பதவிகளில் நியமிக்கப்பட்டார். 1994 ல் நடந்த ருவாண்டா படுகொலை போது அன்னான் ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கையை இயக்கினார். 

இவர் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக 1997ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2006-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டார். 2001ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர், ஐ.நா சார்பில் சிரியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக சில ஆண்டுகள் செயல்பட்டார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவதியுற்று வந்த கோபி அன்னான் இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்