
25 வயதுக்குட்பட்டோர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாதது ஏன் எனக் கேட்டு சென்னையை சேர்ந்த இளம்பெண் அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
சென்னை இளம்பெண் சவுமியா என்பவர் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் அறிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் நிலையில் போட்டியிடுவதற்கு மட்டும் 25 வயது ஆகியிருக்க வேண்டும் என்ற பாரபட்சமான விதி ஏன் என தனது மனுவில் சவும்யா கூறியிருந்தார். ஆர் கே நகர் இடைத் தேர்தலில் 23 வயதான சவும்யா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சவும்யாவின் குறைவான வயதை காரணம் காட்டி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.