முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் வெளியான அறிக்கையில், வாஜ்பாயின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலையும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதிலும் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த பலரும் வாஜ்பாய் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று, இந்திய நேரப்படி மாலை 5.05க்கு பிரிந்தது. இதனையொட்டி பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com