
கேரளாவில் கனமழை நீடிப்பதால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனிடையே மழைநீர் மற்றும் பெரியார் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கொச்சி விமான நிலையத்தில் புகுந்துள்ளதால் விமான நிலையம் முழுவதும் செயல்பட முடியாத அளவிற்கு முடங்கியுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சிக்கு வரும் சிறிய ரக விமானங்களை கடற்படை விமானத்தளத்தில் தரையிறக்க மத்திய அரசிடம் அனுமதி கோர கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் கொச்சிக்கு வரும் பயணிகள் விமானத்தை மும்பைக்கு பதில் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டுக்கு திருப்பிவிடும்படி கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.