டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் பொறியியல் கல்லூரி மாணவர் என்றும், விவசாயம் பொய்த்ததால் அவரது குடும்பத்தாரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம் பிள்ளார்பாளையத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த அகிலன் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின்போது திடீர் என மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
இச்சம்பவம் தொடர்பாக அகிலனின் பெற்றோர் கூறுகையில், தாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தற்போது பருவமழை இல்லாத காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்யமுடியாமல் உள்ளதாகவும் கூறினர். தங்களின் மூன்று குழந்தைகளில் ஒருவர் லாரி ஓட்டுனராகவும் ஒருவர் 8 ம் வகுப்பு படித்து வருவதாகவும் தற்போது டெல்லியி்ல் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் அகிலன் என்பவர் கலந்து கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அகிலன் நாமக்கல் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் பிஇ படிக்க சென்றவர் கல்லூரிக்கு உரிய கட்டணம் செலுத்த முடியாமல் நின்று விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் அகிலனின் பெற்றோர் அகிலனை படிக்க வைக்க அரசு உதவி செய்ய வேண்டும் மற்றும் தாங்கள் விவசாயத்திற்கு வங்கியில் பெற்ற கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்