
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத்திற்காக சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சிறப்பு வசதிகள் தொடர்பான தகவல்களை பயணிகளுக்கு அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பயணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாழ்த்து சொல்வதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது. ஏராளமான பயணிகள் இந்த ரோபோவை வேடிக்கையுடன் பார்த்து செல்கின்றனர். சிலர் வேண்டுமென்ற தங்களின் கேள்விகளை முன்வைத்து ரோபோவின் பதிலை ஆர்வமுடன் கேட்டுச் செல்கின்றனர்.