இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இப்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றதால் இந்திய அணி கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் வரும் 18 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
Also Read: “நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி
இந்நிலையில் இந்திய அணியுடன் பாலிவுட் நடிகையும் இந்தியக் கேப்டன் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனுஷ்கா சர்மாவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க அனுமதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் தங்களது எதிர்ப்பை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கெனவே வீரர்கள் தங்களது மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை குறைத்து, போட்டிகளில் கவனத்தை செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியிருந்தது.
Also Read: சோதனை மேல் சோதனை ! தரவரிசையில் பின் தங்கினார் கோலி
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி, தூதரகத்திற்கு சென்றது. இறுதியாக ஒட்டுமொத்த அணியும், தூதரக கட்டிடத்திற்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டது. இந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் போஸ் கொடுத்தார். அந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதனை கண்ட ட்விட்டர் வாசிகள், அனுஷ்கா சர்மா என்ன இந்திய அணியில் ஒருவரா? அவர் ஏன் இந்திய அணியுடன் புகைப்படத்திற்கு போஸ் தருகிறார். பிசிசிஐ இதனை எப்படி அனுமதித்தது போன்ற கேள்விகளால் தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகினறனர்.
Read Also: விசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி ?
மேலும், எப்போது அனுஷ்கா சர்மா இந்திய அணியில் இணைந்தார்? துணை கேப்டன் புகைப்படத்தில் ஓரமாகவும், அணிக்கு சம்மந்தமே இல்லாத அனுஷ்கா சர்மா, புகைப்படத்திற்கு நடுவே நின்றும் போஸ் கொடுக்கிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று விமர்சித்துள்ளனர். ஆனால், இந்தப் புகைப்படம் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி எடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதால் இப்போது இந்தப் புகைப்படம் சர்ச்சைக்குள்ளானதாக மாறி வருகிறது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அனுஷ்கா சர்மா "எது நடந்ததோ அது நடந்துவிட்டது. இதில் விதி மீறல்கள் ஏதும் இல்லை. பேசுவதற்கு வேறு தலைப்பு இல்லாததால் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்தாதீர்கள்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?