நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து?

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து?
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து?

அனைத்துக்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி, நெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் முன்னெடுக்கப்படாது என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தன. இந்த நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற இருக்கும், ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்தோடு, டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அரசு கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற இருக்கும் ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கையெழுத்திட உள்ளதாக, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெடுவாசலில் நிலக்கரி படுகை மீத்தேன் அல்லது ஷேல் கேஸ் எடுக்கப்பட மாட்டாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே தெரிவித்திருந்தார். திட்டத்தை நிறைவேற்ற இருந்தால், மக்களிடம் கருத்துக்கேட்ட பின்னரே, திட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு ஆவண செய்யும் என்றும் தர்மேந்திர பிரதான் உறுதியளித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com