[X] Close

இரண்டு மூன்று நாட்களில் சொல்கிறேன்: மு.க.அழகிரி

Will-tell-within-two-or-three-days--MK-Alagiri

கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மத்திய முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இன்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளதாக தெரிவித்தார். காலம்தான் இதற்கு பதில் சொல்லும் எனக் கூறிய அழகிரி, தன் தந்தையிடம் கட்சி தொடர்பான தன் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “நான் திமுகவில் தற்போது இல்லை. எனவே திமுக செயற்குழு கூட்டம் பற்றி கூற முடியாது” என்றார்.


Advertisement

இதன்பின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி ரீதியான ஆதங்கம் என்னவென்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன் என தெரிவித்தார். அப்போது, கட்சிக்குள் பிளவு ஏற்பட தொடங்கியிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நான் கட்சியிலேயே தற்போது இல்லை என மு.க.அழகிரி பதிலளித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close