கோவையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், தற்போதைய அமமுக நிர்வாகியுமான சின்னசாமியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
அதிமுகவின் பேரவைகளுள் முக்கியப் பங்கு வகித்து வருவது அண்ணா தொழிற்சங்க பேரவை. இதன் செயலாளராக சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி பதவி வகித்து வந்தார். இவரை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த காலகட்டத்தில் ரூ.8 கோடியை சின்னசாமி கையாடல் செய்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பணம் கையாடல் செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரி காவல்துறையினர் சின்னசாமியை கைது செய்துள்ளனர். சின்னசாமி தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளராகவும், அமமுக நிர்வாகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix