பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு திமுக அறக்கட்டளைச் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் தத்தளித்து வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு திமுக அறக்கட்டளைச் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பலகோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் சேதமடைந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்