திருநெல்வேலி- தூத்துக்குடி நாற்கர சாலையில் அணுகுசாலை இல்லாததால் இறந்தவரது உடலை ஆபத்தான நிலையில் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் அவலநிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி - தூத்துக்குடி நாற்கரசாலை கடந்த 2010 ஆம் ஆண்டு போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி செல்லும் சாலையில் வல்லநாடு பகுதியில் பக்கபட்டி கிராமத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையாக (NH7A) மாற்றி அமைக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கபட்டி கிராம எல்லையில் சுடுகாடு உள்ளது. இங்குதான் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15-க்கும்
மேற்பட்ட கிராமங்களுக்கு சுடுகாடு அமைந்துள்ளது. சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் இந்த நாற்கரசாலை அமைக்கபட்டதால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு விட்டது. முறையான பாதை இல்லாததால் உயர்ந்த சாலையிலிருந்து இறந்தவரின் உடலை தலைகீழாக கீழே இறக்கும் நிலையே இன்று வரை நீடிக்கிறது.
மேலிருந்து கீழாக இறந்தவரின் உடலை கொண்டு செல்லுபோது பலமுறை விபத்தும் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கூட இறந்தவரது உடலை இறக்கும் போது கீழே உருண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் வாகனத்தில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை நாற்கர சாலையிலேயே நிறுத்தும் நிலையால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சுடுகாட்டுக்கு பாதை கேட்டு ஆட்சியரிடமும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை பலனில்லை என்கின்றனர் ஊர்மக்கள். ஆபத்தான இறுதிபயணத்தை மனதில் வைத்து மாவட்ட நிர்வாகம் சரியான தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!