Published : 26,Mar 2017 11:00 AM

நாட்கணக்கில் தூங்கும் நான்கு வயது குழந்தை

Kerala-child-have-Sleeping-problem

கேரளாவில், நான்கு வயது குழந்தை நாட்கணக்கில் தூங்கும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் பெற்றோர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

லியா என்ற அந்தக் குழந்தை, சில சமயம் பத்து அல்லது 12 மணி நேரம் உறங்குவதாக பெற்றோர் கூறுகின்றனர். சில நேரங்களில் நின்று கொண்டிருந்த போதே தூங்கி கீழே விழந்த சம்பவங்களும் உண்டாம். மிக நீண்ட நேரம் உறங்கிய லியாவை எழுப்ப அவளது கண்களில் டார்ச் லைட் வெளிச்சத்தை பாய்ச்சி‌யபோதும் விழித்ததில்லை என்று அக்குழந்தையின் தாயார் லினு டென்னி அச்சத்துடன் கூறுகிறார். போதிய நேரம் தூங்கிய பின்னர் எழுப்பினாலும் அவள் எழுவதில்லை என்பது தாயாரின் கவலையாகும். ஒரு முறை குழந்தை லியா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு உறங்கியதாக அவர் கவலையுடன் கூறுகின்றார். ‌

தூக்கம் வருவதற்கு முன்னர் லிசாவுக்கு கடும்‌ பசி ஏற்படும் என்றும், எரிச்சலை வெளிப்படுத்தி, கடுமையாக அழத் தொடங்கிவிடுவாள் எனவும் தாயார் லினு கூறுகிறார். அந்தக் குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், ரத்தக் கொதிப்பும், சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதும், இதயத்துடிப்பு குறை‌வாக இருப்பதும் தெரியவந்துள்ளது. வலிப்புப் பிரச்னைக்கு சிகிச்சை பெறச் சென்றபோதுதான், குழந்தை லியாவுக்கு தூக்கம் தொடர்பான குறைபாடு இருப்பது தெரியவந்ததாக பெற்றோர் தெரிவிக்கிறார்கள். இது நரம்புகள் தொடர்பான பிரச்னை என்றும் பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு இவ்வாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்