திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவு உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் செவ்வாய் கிழமை மாலை 6.10 மணிக்கு காலமானார். பின்னர் அவரது உடல் கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மீண்டும் ராஜாத்தி அம்மாள் இல்லத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது இறுதி சடங்கில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை. நயன்தாராவும், விக்ரமும் வெளிமாநிலத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று கூறியிருந்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான இசைஞானி இளையராஜா, தான் ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சிக்கு வந்திருப்பதால் கருணாநிதியின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போனதாகக் கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ் பெருங்குடி மக்களே! நமக்கெல்லாம் பெரும் துக்கத் தினமாக ஆகிவிட்டது. கலைஞர் மறைந்தது நமக்கெல்லாம் துக்கத் தினமேதான். இந்தத் துக்கத்தை எப்படி நாம் ஆற்றிக் கொள்ளப் போகிறோம்? எப்படி நாம் திரும்பி வரப் போகிறோம் என்பது தெரியவில்லை.
அரசியல் தலைவர்களிலே கடைசி அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள். சினிமா துறையிலே சுத்தமான தமிழ் வசனங்களை மக்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய கலைஞர், கடைசி வசனகர்த்தா கலைஞர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார். அரசியலாகட்டும் கலையாகட்டும் தமிழாகட்டும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. உண்மையில் ‘ஈடு’ என்ற வார்த்தைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே அவர். இந்தத் தினத்தில் ஆஸ்திரேலியாவில் எனது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டது. எனவே அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!