[X] Close

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் அஞ்சலி

Arvind-Kejriwal--K-Chandrasekhar-rao-paid-tribute-to-Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றடையும். தொண்டர்களும் பொதுமக்களும் அமைதி காத்திட வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

                     


Advertisement

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல்,  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அஞ்சலி செலுத்தினார்.


Advertisement

Advertisement
[X] Close