[X] Close

விவசாயிகள் மீது அக்கறை காட்டாத தமிழக அரசு: ஸ்டாலின் புகார்

TN-Government-do-not-care-Farmers--MK-Stalin

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் அக்கறை காட்டாத தமிழக அரசு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வீடு வீடாக பணம் கொடுக்க வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருப்பதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் தமிழக விவசாயிகள் 13-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழக விவசாயிகளை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசும் மதிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிப்பதாகத் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் டெல்லிப் போராட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக எப்படி பணம் கொடுப்பது என்பது பற்றிய வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் வாக்குறுதிகளை அளித்து, அழைத்து வர வேண்டிய முதலமைச்சர், ’பெரா’குற்றவாளிக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு கேட்டுக்கொண்டிருப்பது வெட்கக் கேடானது எனவும் குறைகூறியுள்ளார்.


Advertisement

முதலமைச்சர் பழனிச்சாமி உடனடியாக டெல்லி சென்று, விவசாயிகளை சந்தித்துப் பேச வேண்டும் என்றும் விவசாயிகளை அழைத்து கொண்டு பிரதமர் மோடியை சந்தித்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசும் விவசாயிகளின் நலன் கருதி வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக, தமிழக அரசு கோரியிருக்கும் 62 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close