Published : 08,Aug 2018 02:43 AM
கருணாநிதியின் மறைவுக்கு ஆளுநர் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்கு இன்று காலை7.40 மணிக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்பு புரோஹித் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொண்டார். உயிரிழந்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். மேலும் கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.