மண்டலமாணிக்கம் அருகே போதைக்கு அடிமையான மகனை கொலை செய்து தடயத்தை இரவோடு இரவாக எரித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை அடுத்த முத்துப்பட்டியில் போதைக்கு அடிமையாகி தினந்தோறும் தொல்லை செய்து வந்த மகனை வெட்டி கொலை செய்து தடயத்தை மறைக்க இரவோடு இரவாக உறவினா்கள் உதவியுடன் சடலத்தை எரித்த வழக்கில் தந்தையை கைது செய்து, உறவினா்கள் 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை அடுத்த முத்துப்பட்டி கிராமத்தை சோ்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணி என்ற மணிகண்டன். இவர் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தனது நண்பா்களுடன் சோ்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதைக்கண்டிக்கும் தந்தை பாலசுப்பிரமணியனுடன் தகராறு செய்வது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல குடித்துவிட்டு போதையில் வந்து தந்தையிடம் தகராறு செய்துள்ளார் மணி. இதனால், ஆத்திரம் அடைந்த தந்தை பாலசுப்பிரமணியன் தனது மகன் மணியை அாரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த தந்தை பாலசுப்பிரமணி, உறவினர்கள் சிலரை துணைக்கு சேர்த்து நேற்று நள்ளிரவில் மணியின் உடலை அம்மன்பட்டியில் உள்ள சுடுகாட்டில் வைத்து எாரித்து கொலையையும், கொலை செய்த தடயங்களையும் மறைத்துள்ளனா்.
ஆனால், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மண்டலமாணிக்கம் போலீசார் எாரிக்கப்பட்ட மணியின் மண்டை ஒடு, எலும்பு உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றியதுடன், தந்தை பாலசுப்பிரமணியை கைது செய்தனர். மேலும் கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது உறவினா்கள் 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை