பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொன்ன ஆலோசனையின் படியே விளையாடி வருகிறேன் என்று பிருத்வி ஷா சொன்னார்.
தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில், இந்திய போர்டு பிரசிடென்ட் அணி யுடன் மோதியது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்திய ஏ அணியுடன் அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியி ல் பங்கேற்றுள்ளது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணியின் கேப்டன் கயா ஸாண்டோ, பேட்டிங்கை தேர்தெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக் கெட்டை வீழ்த்தினார். சைனி, குர்பானி தலா 2 விக்கெட்டையும் சேஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி, 2 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷாவும் மயங்க் அகர்வாலும் அபாரமாக ஆடினர். சதமடித்த பிருத்வி 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய மயங்க் அகர் வால் 250 பந்துகளை சந்தித்து 220 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருக்கிறார். மூன்றாவது நாள் இன்று ஆட்டம் நடக்கிறது.
சதம் அடித்தது பற்றி கூறிய பிருத்வி ஷா, தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அதிக பங்கு உண்டு என்றார். பிருத்வி ஷா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக இருந்தவர். அப்போது அவருக்கு பயிற்சியாளராக இருந்தது டிராவிட். இப்போது இந்திய ஏ அணியில் பிருத்வி இடம்பெற்றுள்ளார். இதன் பயிற்சியாளராகவும் டிராவிட் இருக்கிறார். சமீபத்தில் இங்கி லாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணி விளையாடியது. அந்த தொடரில் பிருத்வி ஷா அபாரமாக ஆடினார்.
இப்போது நடக்கும் போட்டியிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.
(ராகுல் டிராவிட்)
இதுபற்றி பிருத்வி ஷா கூறும்போது, ’பயிற்சி ஆட்டத்தின்போது, என் பின் கால்களை மாற்றி வைத்து ஆடப் பயிற்சிப் பெற்றேன். ஆனால், அது எனக்கு சரியாக வரவில்லை. அப்போதுதான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அப்படி செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதை புரிய வைத்தார். உனது ஸ்டைலுக்கு எப்படி ஆட முடியுமோ, அப்படியே செய் என்றார். பிறகுதான் எனது தவறை உணர்ந்து திருத்திக்கொண்டேன்.
அதோடு, ‘அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொள். அதன்படி நிலையாக நின்று விளையாடு’ என்று கூறியிருந் தார். அவரது ஆலோசனையின் படியே ஆடி வருகிறேன். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ரஹானே,
முரளி விஜய் ஆகியோர் வலை பயிற்சியில் ஈடுபட்டதை அருகிருந்து பார்த்தேன். பந்துகளை எப்படி எதிர்கொள்கிறார்கள், எந்த மாதிரியான ஷாட்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்களிடம் சில விஷயங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் மயங்க் அகர்வால் 200 ரன்களுக்கு மேல் குவித்து ஆடி வருகிறார். நான் பார்த்த வகையில் அவரது சிறப்பான ஆட்டம் இது. இன்றும் அவர் நிலைத்து நின்று அதிக ரன்கள் குவிப்பார்’ என்றார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்