
ஜியோவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் ரூ.399க்கு மேல் ப்ளான்களில் பிஎஸ்என்எல் புதிய ஆஃபரை அளித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அதற்குக் காரணம் ஜியோ வழங்கிய ஆஃபர். இலவச டேட்டா, இலவச போன்கள் என ஜியோ வழங்கிய மெகா ஆஃபர்களில், மற்ற சிம் நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. ஜியோவின் இலவச சேவைகள் முடிந்த பின்னரும், குறைந்த விலையில் ஜியோ சேவைகளை வழங்கி வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மற்ற சிம் நிறுவனங்களும் தங்கள் ரிசார்ஜ் ப்ளான்களில் பல புதிய ஆஃபர்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ரூ.399க்கும் மேலான ப்ளான்களில் உள்ள போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 100 இலவச மெசெஜ்களை வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைப்படி ரூ.399க்கு மேல் உள்ள ப்ளான்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் கடைசி நாள் வேலிடிட்டி முடியும் வரை தினமும் 100 மெசெஜ்களை இலவசமாக அனுப்ப முடியும். ரூ.399க்கு கீழ் உள்ள ப்ளான்களை பயன்படுத்துவோருக்கு வேலிடிட்டி முடியும் வரை மொத்த உள்ள நாட்களுக்கும் 100 மெசெஜ்கள் அனுப்ப முடியும். இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியா முழுவதும் கொண்டுவரப்படவுள்ளது.