Published : 05,Aug 2018 10:13 AM

ஆகஸ்ட் 21ல் அஞ்சல் துறை வங்கி : தொடங்கிவைக்கிறார் பிரதமர்

PM-Modi-to-launch-India-Post-Payments-Bank-on-August-21

இந்திய அஞ்சல் துறையின் பணப்பட்டுவாடா வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க் என்ற பெயரிலான வங்கிகள் ஏற்கனவே இரண்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் புதிதாக 648 கிளைகளை பிரதமர் முறைப்படி தொடங்கிவைக்கிறார். இந்த வங்கிகளுடன் நாட்டிலுள்ள ஒன்றரை லட்சம் அஞ்சல் அலுவலகங்களும் இந்தாண்டு இறுதிக்குள் இணைக்கப்பட உள்ளன. இதன் பின்னர் இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி நாட்டின் மிகப்பெரிய வங்கிச் சேவையாளராக மாறும். 

இந்திய அஞ்சலகங்களில் மட்டும் 17 கோடி பேர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல், பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே பணப்பட்டுவாடா வங்கிச் சேவையை வழங்கி வருகின்றன. கிராமப்புறங்களில் நிதிச் சேவையை அளிப்பதற்கு இவ்வங்கி முக்கியத்துவம் அளிக்கும் என்றும், முதலில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு வங்கி என்ற அளவில் தொடங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவையை வரும் 21ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்