Published : 04,Aug 2018 11:05 AM
நெல்லை அருகே அருவியில் குளித்து மகிழ்ந்த தோனி..!

தமிழகம் வந்த இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நெல்லை மாவட்டம் குண்டாறு அருகேயுள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தார்.
நெல்லையில் நடைபெறும், கோவை - மதுரை இடையேயான தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஆட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தோனி நெல்லை
வந்தார். இதனிடையே குண்டாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான அருவியில் குளித்து மகிழ்ந்தார். தோனியின் வருகையை அறிந்த
சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கையில் செல்போனுடன் அவரை சூழ்ந்து வட்டமிட்டனர்.
இதனால் அப்பகுதியில் கூட்டம் அலை மோதியது. நெல்லை மண்ணில் தோனியை பார்த்தது ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.