நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 11 இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இதன்கீழ் 37 இலட்சம் மதிப்பில் 11 இடங்களில் 66 சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டன. நாமக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேலம் சாலை சந்திப்பில் நடைபெற்ற விழாவில் பயன்பாட்டிற்கு மின் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாமக்கல் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் புதியதாக போட்டி தேர்வுகளுக்காக அமைக்கப்பட்ட காவல் சிறுவர் நூலகத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி அரசு துறை அலுவலகங்களில் 1500 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளதாகவும், இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மின் கட்டண பாக்கி அதிகமாக உள்ளதாகவும், ஒவ்வொரு துறையிலும் மின் கட்டணத்தை வசூல் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 4000 மலை கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை என்றும், வன்ப்பகுதியில் மின் கம்பங்களை எடுத்து செல்ல தடையுள்ள நிலையில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அக்கிராமங்களுக்கும் விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!