[X] Close

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் திட்டம் : மத்திய அரசின் முடிவு?

Central-government-decide-about-Social-Media

சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. 

பசு வதை மற்றும் குழந்தைக் கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகள் வேகமாகப் பரவியது. இதன் அடிப்படையில் சில கும்பலால், பலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் அண்மையில் நடந்தன. வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. 

இந்நிலையில், கண்காணிப்பு மையங்களால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்று கருதி, அந்தத் திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாறாக, வதந்தி தொடர்பாக ஒரு புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க விசாரணை  அமைப்புகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close