சிங்களர்கள் நடத்தியது புனிதபோர் அல்ல: திருமாவளவன்

சிங்களர்கள் நடத்தியது புனிதபோர் அல்ல: திருமாவளவன்
சிங்களர்கள் நடத்தியது புனிதபோர் அல்ல: திருமாவளவன்

இலங்கையில் சிங்களர்கள் நடத்திய போர் புனிதப் போர் அல்ல தமிழர்கள் நடத்திய போர்தான் புனிதப்போர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்திருப்பது குறித்து புதிய தலைமுறையிடம் கருத்துத் தெரிவித்த திருமாவளவன், இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது என்றார்.ரஜினி மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் வந்தால் தங்களுக்கு பாதகமாக அமையும் என இலங்கை தமிழர்கள் கூறினார்கள் என திருமாவளவன் தெரிவித்தார். தற்போதுள்ள அரசியல் சூழலில் ரஜினி இலங்கை வருவது அவரது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் என அங்குள்ள தமிழர்கள் எண்ணுவதாக அவர் தெரிவித்தார்.

ரஜினியின் அறிக்கையில் புனிதப்போர் என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இலங்கையில் சிங்களர்கள் நடத்திய போர் புனிதப் போர் அல்ல தமிழர்கள் நடத்திய போர்தான் புனிதப்போர் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com