நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார். நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், இரவு நடிகர் ரஜினிகாந்தும் நலம் விசாரித்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார். இதற்காக வழக்கமாக பயன்படுத்தும் காரில் செல்லாமல், சிறிய வகை காரில் மருத்துவமனைக்குச் சென்றார் விஜய். நலம் விசாரித்தப் பின் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக மருத்துவமனையின் பின் வாசல் வழியாக அவர் சென்றார்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி