கோவையில் வழக்கமாக மருத்துவமனை பதிலாக முதன்முறையாக காய்கறி மருத்துவமனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உணவே மருந்து எனப் பல காலங்களாக கூறப்பட்டு வரும் நிலையில், அதனை நிரூபிக்கும் வகையில் கோவையில் புதியதாக துவங்கப்பட்டுள்ள மருத்துவமனையில் மருந்து சீட்டில், மாத்திரைகளுக்கு பதிலாக, காய்கறிகளை எழுதிக் கொடுக்கும் காய்கறி மருத்துவமனையை துவங்கி உள்ளனர். அது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நவீன கால மாற்றங்கள் காரணமாக துரித உணவுகள், உடற்பயிற்சி செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நோய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பண்டைய காலங்களில் உணவே மருந்து என்பதற்கு ஏற்ற வகையில் நாம் உண்ணும் அன்றாட உணவுகளையே மருந்தாக உட்கொண்டு நோய்களை சரிபடுத்தினர். அதே போன்ற நடைமுறையை கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புகுத்தி உள்ளனர். வரவேற்பிலேயே காய்கறிகளை கொண்டு வரவேற்கும் இந்த மருத்துவமனையை காய்கறி மருத்துவமனை என அழைக்கின்றனர்.
வழக்கமாக அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து சீட்டில் நோய்களை குணமாக்கும், பல்வேறு மாத்திரைகளை எழுதிக் கொடுக்கின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் மருந்து சீட்டில் முற்றிலும் காய்கறிகளையே எழுதிக் கொடுக்கின்றனர். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவர் ஆயுர்வேத மருத்துவத்தை பார்த்து வருந்தார். அப்போது காய்கறிகளையும் ஆயுர்வேத மருத்துகளோடு பரிந்துரைத்து வந்து உள்ளார். இதனையடுத்து காய்கறிகளையே மருந்தாக அளிக்கும் மருத்துவ முறையை துவங்கி உள்ளார். அதற்குப் பலனும் கிடைத்ததால், தற்போது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.
நாடி பிடித்து ஒவ்வொருவருக்கும் எந்த வைட்டமின் குறைவாக உள்ளது என்பதை அறிந்து, அதனை சரி செய்யும் வகையிலான நாட்டுக் காய்கறிகளை பரிந்துரைக்கிறார் இவர். இந்தக் காய்கறிகளை சமைக்காமல், பச்சையாகவே உட்கொள்ள வேண்டும். இதன் மூலமாக காய்கறிகளின் வைட்டமின்கள் அனைத்தும் வீணாகாமல் இருப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் எனக் கூறுகின்றனர்.
வழக்கமான மாத்திரைகள் வலி நிவாரணியாகவும், பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், நிரந்தர தீர்வை அளிப்பதில்லை எனவும் கூறும் பொதுமக்கள், இந்தக் காய்கறி மருத்துவத்தால் நோய்களுக்கு நிரந்தர தீர்வுக் கிடைப்பதாக கூறுகின்றனர். ஆரம்ப காலத்தில் பச்சைக் காய்கறிகளை உட்கொள்ள கடினமாக இருந்த போதிலும், நாளடைவில் அதனை உட்கொள்ளும் போது உடலில் பல்வேறு மாற்றங்களை உணர்வதாகவும், இதனால் புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!