Published : 31,Jul 2018 04:50 AM

கருணாநிதியின் நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார் ராகுல்காந்தி..!

Rahul-Gandhi-visit-chennai-today-to-enquire-about-Karunanidhi-Health-conditions

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கருணாநிதியை தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நேற்று நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தனர். இதுதவிர பல அரசியல் தலைவர்களும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வர உள்ளார். மாலை  4 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை ராகுல்காந்தி சந்திப்பார் என தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்