விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது தாயை கொலை செய்த நபரை 4 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மகன் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு பணம் வாங்கல், கொடுக்கல் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சங்கர சுப்பிரமணியன் 2015-ம் ஆண்டு ஜாமீனில் வெளியேவந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று மலையப்பட்டி பகுதியில் சாலையில் நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை மீட்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 2014-ம் ஆண்டு ரமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக சங்கர சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை கொலை செய்ய ரமணியின் மகன் திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கைதான 6 பேரையும் சிறையில் அடைத்து தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்