[X] Close

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை

Maharashtra--Kin-of-Raigad-bus-accident-victims-will-get-jobs

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் ‌கொங்கண் பகுதியில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, ராய்காட் பகுதியில் 500‌அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 30 பேர் பலியாகினர். இவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அந்த மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் 30 பேரின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை அளிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மகாராஷ்டிர அமைச்சர் ரவீந்திர வைக்கர் கூறுகையில், 30 பேரில் 23 பேர் முழு நேர ஊழியர்கள், அவர்களுக்கு அரசு வேலை அளிக்கப்படும் எனவும், எஞ்சிய 7 ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லை, எனினும் அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து அரசு வேலை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தா‌ர்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close