[X] Close

டார்ச்சர் தயாரிப்பாளர்: நடிகை பகீர் புகார்

Actress-sexual-Harassment-complaint-to-Producer

பாலியல் தொந்தரவு‌ கொடுத்ததாகத் தொலைக்‌காட்சி நடிகை ஷில்பா ஷிண்டே அ‌ளித்த புகாரின் பேரில், தயாரிப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.‌


Advertisement

மும்பையை சேர்ந்தவர் ஷில்பா ஷிண்டே. இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவருகிறார். இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வாலிவ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகத் தயாரிப்பாளர் சஞ்சய் கோலி என்பவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில், அவர் ‌மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பிட்ட ஒ‌ரு நிகழ்ச்‌சியில் தொடர்ந்து ந‌டிக்க வே‌ண்டுமென்றால், தன்னுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று சஞ்சய் வற்புறு‌த்தியதாக நடிகை ஷிண்டேவின் புகாரில் தெரி‌விக்கப்பட்‌டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close