தடகள வீராங்கனைக்கு தான் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று பயிற்சியாளர் நிபான் தாஸ் தெரிவித்துள்ளார்.
பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச தடகள சாம்பியன்ஸ் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந் தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் ஹிமா தாஸ். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை, 18 வயதாகும் ஹிமா பெற்றுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸின் பயிற் சியாளர் நிப்பான் தாஸ். ஹிமா, தங்கம் வெல்ல உழைத்தவர்.
(ஹிமா தாஸ்)
இவர் மீது அசாமை சேர்ந்த மற்றொரு தடகள வீராங்கனை பாலியல் புகார் கூறியுள்ளார். கடந்த மே மாதம், கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நிப்பான் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது.
(நிபான் தாஸ்)
இந்நிலையில் நிபான் தாஸ் அதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ‘என் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அதில் உண்மை இருந்தால் என்னைத் தண்டிக்கட்டும். உண்மை இல்லை என்றால் அந்த அத்லெட் தண்டிக்கப்பட வேண்டும். நான் நேர்மை யானவன். இதுபற்றி எனது மற்ற மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறியுள்ளனர். அதை செய்துகொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்